திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [11] குடியியல் (Miscellaneous)
அதிகாரம்: [99] சான்றாண்மை (Perfectness)
குறள் : 981கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


விளக்கம்:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
Kural: 981Translation:
All goodness is duty to them Who are dutiful and sublime

Explanation:
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good
குறள் : 982குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.


விளக்கம்:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
Kural: 982Translation:
Good in the great is character Than that there is nothing better

Explanation:
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights
குறள் : 983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.


விளக்கம்:
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
Kural: 983Translation:
Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place

Explanation:
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests
குறள் : 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.


விளக்கம்:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
Kural: 984Translation:
Not to kill is penance pure Not to slander virtue sure

Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults
குறள் : 985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.


விளக்கம்:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
Kural: 985Translation:
Humility is valour's strength A force that averts foes at length

Explanation:
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes
குறள் : 986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.


விளக்கம்:
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
Kural: 986Translation:
To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men

Explanation:
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors
குறள் : 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.


விளக்கம்:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.
Kural: 987Translation:
Of perfection what is the gain If it returns not joy for pain?

Explanation:
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?
குறள் : 988இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.


விளக்கம்:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
Kural: 988Translation:
No shame there is in poverty To one strong in good quality

Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities
குறள் : 989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.


விளக்கம்:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
Kural: 989Translation:
Aeons may change but not the seer Who is a sea of virtue pure

Explanation:
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change
குறள் : 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.


விளக்கம்:
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
Kural: 990Translation:
The world will not more bear its weight If from high virtue fall the great

Explanation:
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...