திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [19] புறங்கூறாமை (Not Backbiting)
குறள் : 181அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.


விளக்கம்:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
Kural: 181Translation:
Though a man from virtue strays, To keep from slander brings him praise

Explanation:
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
குறள் : 182அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


விளக்கம்:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
Kural: 182Translation:
Who bite behind, and before smile Are worse than open traitors vile

Explanation:
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue
குறள் : 183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.


விளக்கம்:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.
Kural: 183Translation:
Virtue thinks it better to die, Than live to backbite and to lie

Explanation:
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out
குறள் : 184கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.


விளக்கம்:
எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
Kural: 184Translation:
Though harsh you speak in one's presence Abuse is worse in his absence

Explanation:
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it
குறள் : 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.


விளக்கம்:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
Kural: 185Translation:
Who turns to slander makes it plain His praise of virtue is in vain

Explanation:
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back
குறள் : 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.


விளக்கம்:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
Kural: 186Translation:
His failings will be found and shown, Who makes another's failings known

Explanation:
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published
குறள் : 187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.


விளக்கம்:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
Kural: 187Translation:
By pleasing words who make not friends Sever their hearts by hostile trends

Explanation:
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives
குறள் : 188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.


விளக்கம்:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
Kural: 188Translation:
What will they not to strangers do Who bring their friends' defects to view?

Explanation:
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
குறள் : 189அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.


விளக்கம்:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
Kural: 189Translation:
The world in mercy bears his load Who rants behind words untoward

Explanation:
The world through charity supports the weight of those who reproach others observing their absence
குறள் : 190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


விளக்கம்:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?
Kural: 190Translation:
No harm would fall to any man If each his own defect could scan

Explanation:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...