திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [3] துறவறவியல் (Ascetic Virtue)
அதிகாரம்: [32] இன்னா செய்யாமை (Not doing Evil)
குறள் : 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


விளக்கம்:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
Kural: 311Translation:
The pure by faith mean pain to none Though princely wealth by that is won

Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness
குறள் : 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


விளக்கம்:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
Kural: 312Translation:
The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage

Explanation:
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil
குறள் : 313செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.


விளக்கம்:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
Kural: 313Translation:
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat

Explanation:
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow
குறள் : 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.


விளக்கம்:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
Kural: 314Translation:
Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm

Explanation:
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides
குறள் : 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.


விளக்கம்:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
Kural: 315Translation:
What does a man from wisdom gain If he pines not at other's pain?

Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
குறள் : 316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.


விளக்கம்:
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
Kural: 316Translation:
What you feel as pain to yourself Do it not to the other-self

Explanation:
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow
குறள் : 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.


விளக்கம்:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
Kural: 317Translation:
Any, anywhere injure not At any time even in thought

Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time
குறள் : 318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.


விளக்கம்:
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
Kural: 318Translation:
How can he injure other souls Who in his life injury feels

Explanation:
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
குறள் : 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.


விளக்கம்:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
Kural: 319Translation:
Harm others in the forenoon Harm seeks thee in afternoon

Explanation:
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening
குறள் : 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.


விளக்கம்:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
Kural: 320Translation:
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers

Explanation:
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...