திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [6] அமைச்சியல் (Minister of State)
அதிகாரம்: [68] வினை செயல்வகை (Modes of Action)
குறள் : 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.


விளக்கம்:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
Kural: 671Translation:
When counsel takes a resolve strong Weak delay of action is wrong

Explanation:
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil
குறள் : 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.


விளக்கம்:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
Kural: 672Translation:
Delay such acts as need delay Delay not acts that need display

Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over
குறள் : 673ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.


விளக்கம்:
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
Kural: 673Translation:
It's best to act when feasible If not see what is possible

Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method
குறள் : 674வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.


விளக்கம்:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
Kural: 674Translation:
Work or foe left unfinished Flare up like fire unextinguished

Explanation:
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire
குறள் : 675பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.


விளக்கம்:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
Kural: 675Translation:
Money and means, time, place and deed Decide these five and then proceed

Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz money, means, time, execution and place
குறள் : 676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.


விளக்கம்:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Kural: 676Translation:
Weigh well the end, hindrance, profit And then pursue a fitting act

Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion)
குறள் : 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.


விளக்கம்:
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்
Kural: 677Translation:
Know first the secret from experts That is the way of fruitful acts

Explanation:
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof
குறள் : 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.


விளக்கம்:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
Kural: 678Translation:
Lure a tusker by a tusker Achieve a deed by deed better

Explanation:
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another
குறள் : 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.


விளக்கம்:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
Kural: 679Translation:
Than doing good to friends it is More urgent to befriend the foes

Explanation:
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends
குறள் : 680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.


விளக்கம்:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
Kural: 680Translation:
Small statesmen fearing people's fear Submit to foes superior

Explanation:
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...