திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [124] உறுப்புநலன் அழிதல் (Wasting Away)
குறள் : 1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.


விளக்கம்:
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
Kural: 1231Translation:
To lift from want he left me afar His thought makes my eyes blush the flower

Explanation:
While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers
குறள் : 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.


விளக்கம்:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
Kural: 1232Translation:
My pale tearful eyes betray The hardness of my husband, away

Explanation:
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved
குறள் : 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.


விளக்கம்:
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
Kural: 1233Translation:
These arms that swelled on nuptial day Now shrunk proclaim \"He is away\"

Explanation:
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)
குறள் : 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.


விளக்கம்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
Kural: 1234Translation:
Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave

Explanation:
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose
குறள் : 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.


விளக்கம்:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
Kural: 1235Translation:
Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty

Explanation:
The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one
குறள் : 1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.


விளக்கம்:
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
Kural: 1236Translation:
Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul

Explanation:
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened
குறள் : 1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.


விளக்கம்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
Kural: 1237Translation:
Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find

Explanation:
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
குறள் : 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.


விளக்கம்:
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
Kural: 1238Translation:
The front of this fair one O paled As my clasping arms loosed their hold

Explanation:
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow
குறள் : 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.


விளக்கம்:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
Kural: 1239Translation:
Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once

Explanation:
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow
குறள் : 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.


விளக்கம்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
Kural: 1240Translation:
Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair

Explanation:
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...