திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [12] களவியல் (The Pre-marital love)
அதிகாரம்: [112] நலம் புனைந்து உரைத்தல் (The Praise of her Beauty)
குறள் : 1111நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.


விளக்கம்:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
Kural: 1111Translation:
Soft blessed anicha flower, hail On whom I dote is softer still

Explanation:
May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you
குறள் : 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.


விளக்கம்:
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
Kural: 1112Translation:
You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed

Explanation:
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them
குறள் : 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


விளக்கம்:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.
Kural: 1113Translation:
The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes

Explanation:
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,
குறள் : 1114காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.


விளக்கம்:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
Kural: 1114Translation:
Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes

Explanation:
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."
குறள் : 1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.


விளக்கம்:
அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
Kural: 1115Translation:
Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares!

Explanation:
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem
குறள் : 1116மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.


விளக்கம்:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
Kural: 1116Translation:
Stars are confused to know which is The moon and which is woman's face

Explanation:
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance
குறள் : 1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.


விளக்கம்:
குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.
Kural: 1117Translation:
Are there spots on the lady's face Just as in moon that changes phase?

Explanation:
Could there be spots in the face of this maid like those in the bright full moon ?
குறள் : 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.


விளக்கம்:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
Kural: 1118Translation:
Like my lady's face if you shine All my love to you; hail O moon!

Explanation:
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?
குறள் : 1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.


விளக்கம்:
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
Kural: 1119Translation:
Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!

Explanation:
O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all
குறள் : 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.


விளக்கம்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
Kural: 1120Translation:
The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair

Explanation:
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...