திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [45] பெரியாரைத் துணைக்கோடல் (Seeking the Aid of Great Men)
குறள் : 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.


விளக்கம்:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
Kural: 441Translation:
Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain

Explanation:
Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge
குறள் : 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.


விளக்கம்:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
Kural: 442Translation:
Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill

Explanation:
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen
குறள் : 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.


விளக்கம்:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
Kural: 443Translation:
Honour and have the great your own Is rarest of the rare things known

Explanation:
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things
குறள் : 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.


விளக்கம்:
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
Kural: 444Translation:
To have betters as intimates Power of all powers promotes

Explanation:
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest
குறள் : 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.


விளக்கம்:
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
Kural: 445Translation:
Ministers are the monarch's eyes Round him should be the right and wise

Explanation:
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them
குறள் : 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.


விளக்கம்:
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
Kural: 446Translation:
To move with worthy friends who knows Has none to fear from frightful foes

Explanation:
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men
குறள் : 447இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.


விளக்கம்:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
Kural: 447Translation:
No foe can foil his powers whose friends reprove him when he errs

Explanation:
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
குறள் : 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.


விளக்கம்:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
Kural: 448Translation:
The careless king whom none reproves Ruins himself sans harmful foes

Explanation:
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him
குறள் : 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.


விளக்கம்:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
Kural: 449Translation:
No capital, no gain in trade No prop secure sans good comrade

Explanation:
There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to
குறள் : 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.


விளக்கம்:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
Kural: 450Translation:
To give up good friends is ten times worse Than being hated by countless foes

Explanation:
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...