திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [132] புலவி நுணுக்கம் (Feigned Anger)
குறள் : 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.


விளக்கம்:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
Kural: 1311Translation:
I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed

Explanation:
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you
குறள் : 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.


விளக்கம்:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
Kural: 1312Translation:
He sneezed while we went on sulking Expecting me to say \"live long\"

Explanation:
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life
குறள் : 1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.


விளக்கம்:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
Kural: 1313Translation:
\"For which lady?\" she widely cries While I adorn myself with flowers

Explanation:
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman
குறள் : 1314யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.


விளக்கம்:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
Kural: 1314Translation:
\"I love you more than all\" I said \"Than whom, than whom?\" she sulked and chid

Explanation:
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky
குறள் : 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.


விளக்கம்:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
Kural: 1315Translation:
\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled

Explanation:
When I said I would never part from her in this life her eyes were filled with tears
குறள் : 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.


விளக்கம்:
நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
Kural: 1316Translation:
I said I thought of you She left Her embrace crying \"Oft you forget\"

Explanation:
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike
குறள் : 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.


விளக்கம்:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
Kural: 1317Translation:
I sneezed; she blessed; then changed and wept \"You sneezed now at which lady's thought?\"

Explanation:
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"
குறள் : 1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.


விளக்கம்:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
Kural: 1318Translation:
I repressed sneeze; she wept crying \"Your thoughts from me you are hiding\"

Explanation:
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you"
குறள் : 1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.


விளக்கம்:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.
Kural: 1319Translation:
I try to coax her and she remarks \"Your coaxing others thus this marks\"

Explanation:
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave
குறள் : 1320நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.


விளக்கம்:
அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
Kural: 1320Translation:
I think and gaze at her; she chides: \"On whom your thought just now abides?\"

Explanation:
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...