திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [95] மருந்து (Medicine)
குறள் : 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


விளக்கம்:
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
Kural: 941Translation:
Wind, bile and phlegm three cause disease So doctors deem it more or less

Explanation:
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease
குறள் : 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.


விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
Kural: 942Translation:
After digestion one who feeds His body no medicine needs

Explanation:
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested
குறள் : 943அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.


விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
Kural: 943Translation:
Eat food to digestive measure Life in body lasts with pleasure

Explanation:
If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul
குறள் : 944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.


விளக்கம்:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
Kural: 944Translation:
Know digestion; with keen appetite Eat what is suitable and right

Explanation:
(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)
குறள் : 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.


விளக்கம்:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
Kural: 945Translation:
With fasting adjusted food right Cures ills of life and makes you bright

Explanation:
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable
குறள் : 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.


விளக்கம்:
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
Kural: 946Translation:
Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health

Explanation:
As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously
குறள் : 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.


விளக்கம்:
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
Kural: 947Translation:
who glut beyond the hunger's fire Suffer from untold diseases here

Explanation:
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)
குறள் : 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


விளக்கம்:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
Kural: 948Translation:
Test disease, its cause and cure And apply remedy that is sure

Explanation:
Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)
குறள் : 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.


விளக்கம்:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Kural: 949Translation:
Let the skilful doctor note The sickmen, sickness, season and treat

Explanation:
The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)
குறள் : 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.


விளக்கம்:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
Kural: 950Translation:
Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course

Explanation:
Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...