திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [123] பொழுதுகண்டு இரங்கல் (Lamentations at Eventide)
குறள் : 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.


விளக்கம்:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
Kural: 1221Translation:
Bless you! you are not eventide But killing dart to wedded bride!

Explanation:
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women
குறள் : 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.


விளக்கம்:
மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
Kural: 1222Translation:
Hail sad eventide dim and grim Has your mate like mine, cruel whim!

Explanation:
A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine
குறள் : 1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.


விளக்கம்:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
Kural: 1223Translation:
Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain

Explanation:
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow
குறள் : 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.


விளக்கம்:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
Kural: 1224Translation:
Lover away, comes eventide Like slayer to field of homicide

Explanation:
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter
குறள் : 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை?


விளக்கம்:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
Kural: 1225Translation:
What good have I done to morning And what evil to this evening?

Explanation:
O eve, why art thou foe! thou dost renew my grief
குறள் : 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.


விளக்கம்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
Kural: 1226Translation:
Evening pangs I have not known When my lord nev'r left me alone

Explanation:
Previous to my husband's departure, I know not the painful nature of evening
குறள் : 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.


விளக்கம்:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
Kural: 1227Translation:
Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay

Explanation:
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
குறள் : 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.


விளக்கம்:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.
Kural: 1228Translation:
A deadly arm, this shepherd's flute Hails flaming eve and slays my heart

Explanation:
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)
குறள் : 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.


விளக்கம்:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
Kural: 1229Translation:
Deluding eve if it prolongs The whole town will suffer love-pangs

Explanation:
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow
குறள் : 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.


விளக்கம்:
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
Kural: 1230Translation:
Thinking of him whose quest is wealth My life outlives the twilight stealth

Explanation:
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...