திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [12] களவியல் (The Pre-marital love)
அதிகாரம்: [110] குறிப்பறிதல் (Recognition of the Signs )
குறள் : 1091இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


விளக்கம்:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
Kural: 1091Translation:
Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart

Explanation:
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof
குறள் : 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.


விளக்கம்:
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
Kural: 1092Translation:
Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore

Explanation:
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)
குறள் : 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.


விளக்கம்:
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
Kural: 1093Translation:
She looked; looking bowed her head And love-plant was with water fed

Explanation:
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love
குறள் : 1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.


விளக்கம்:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
Kural: 1094Translation:
I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile

Explanation:
When I look, she looks down; when I do not, she looks and smiles gently
குறள் : 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்


விளக்கம்:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
Kural: 1095Translation:
No direct gaze; a side-long glance She darts at me and smiles askance

Explanation:
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles
குறள் : 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.


விளக்கம்:
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
Kural: 1096Translation:
Their words at first seem an offence But quick we feel them friendly ones

Explanation:
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood
குறள் : 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.


விளக்கம்:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
Kural: 1097Translation:
Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks

Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers
குறள் : 1098அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.


விளக்கம்:
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
Kural: 1098Translation:
What a grace the slim maid has! As I look she slightly smiles

Explanation:
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me
குறள் : 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


விளக்கம்:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.
Kural: 1099Translation:
Between lovers we do discern A stranger's look of unconcern

Explanation:
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers
குறள் : 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.


விளக்கம்:
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
Kural: 1100Translation:
The words of mouth are of no use When eye to eye agrees the gaze

Explanation:
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...