திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [7] மக்கட்பேறு (The Wealth of Children)
குறள் : 61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


விளக்கம்:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
Kural: 61Translation:
The world no higher bliss bestows Than children virtuous and wise

Explanation:
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children
குறள் : 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.


விளக்கம்:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
Kural: 62Translation:
No evil comes and no blemish; Noble sons bring all we wish

Explanation:
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice
குறள் : 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.


விளக்கம்:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
Kural: 63Translation:
Children are one's wealth indeed Their wealth is measured by their deed

Explanation:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf
குறள் : 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.


விளக்கம்:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
Kural: 64Translation:
The food is more than nectar sweet In which one's children hands insert

Explanation:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia
குறள் : 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


விளக்கம்:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
Kural: 65Translation:
Children's touch delights the body Sweet to ears are their words lovely

Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear
குறள் : 66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


விளக்கம்:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Kural: 66Translation:
The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!

Explanation:
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children
குறள் : 67தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


விளக்கம்:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
Kural: 67Translation:
A father's duty to his son is To seat him in front of the wise

Explanation:
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned
குறள் : 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


விளக்கம்:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
Kural: 68Translation:
With joy the hearts of parents swell To see their children themselves excel

Explanation:
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves
குறள் : 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


விளக்கம்:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
Kural: 69Translation:
The mother, hearing her son's merit Delights more than when she begot

Explanation:
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth
குறள் : 70மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.


விளக்கம்:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
Kural: 70Translation:
The son to sire this word is debt \"What penance such a son begot!\"

Explanation:
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...