திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [11] குடியியல் (Miscellaneous)
அதிகாரம்: [97] மானம் (Honour)
குறள் : 961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.


விளக்கம்:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
Kural: 961Translation:
Though needed for your life in main, From mean degrading acts refrain

Explanation:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death
குறள் : 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.


விளக்கம்:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
Kural: 962Translation:
Who seek honour and manly fame Don't do mean deeds even for name

Explanation:
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame
குறள் : 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.


விளக்கம்:
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
Kural: 963Translation:
Be humble in prosperity In decline uphold dignity

Explanation:
In great prosperity humility is becoming; dignity, in great adversity
குறள் : 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.


விளக்கம்:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
Kural: 964Translation:
Like hair fallen from head are those Who fall down from their high status

Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head
குறள் : 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.


விளக்கம்:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
Kural: 965Translation:
Even hill-like men will sink to nought With abrus-grain-like small default

Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
குறள் : 966புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.


விளக்கம்:
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
Kural: 966Translation:
Why fawn on men that scorn you here It yields no fame, heaven's bliss neither

Explanation:
Why follow men who scorn, and at their bidding wait?
குறள் : 967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.


விளக்கம்:
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
Kural: 967Translation:
Better it is to die forlorn Than live as slaves of those who scorn

Explanation:
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him
குறள் : 968மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.


விளக்கம்:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
Kural: 968Translation:
Is nursing body nectar sweet Even when one's honour is lost?

Explanation:
For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death
குறள் : 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.


விளக்கம்:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
Kural: 969Translation:
Honour lost, the noble expire Like a yak that loses its hair

Explanation:
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs
குறள் : 970இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.


விளக்கம்:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
Kural: 970Translation:
Their light the world adores and hails Who will not live when honour fails

Explanation:
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...