திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [3] துறவறவியல் (Ascetic Virtue)
அதிகாரம்: [34] நிலையாமை (Instability)
குறள் : 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.


விளக்கம்:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
Kural: 331Translation:
The worst of follies it is told The fleeting as lasting to hold

Explanation:
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)
குறள் : 332கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.


விளக்கம்:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
Kural: 332Translation:
Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes

Explanation:
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly
குறள் : 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.


விளக்கம்:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
Kural: 333Translation:
Wealth wanes away; but when it comes Take care to do enduring things

Explanation:
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
குறள் : 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.


விளக்கம்:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
Kural: 334Translation:
The showy day is but a saw Your life, know that, to file and gnaw

Explanation:
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life
குறள் : 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்


விளக்கம்:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
Kural: 335Translation:
Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes

Explanation:
Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent
குறள் : 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.


விளக்கம்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
Kural: 336Translation:
One was yesterday; not today!

Explanation:
This world possesses the greatness that one who yesterday was is not today
குறள் : 337ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.


விளக்கம்:
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
Kural: 337Translation:
Man knows not his next moment On crores of things he is intent

Explanation:
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment
குறள் : 338குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.


விளக்கம்:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
Kural: 338Translation:
The soul from body any day Like bird from egg-shell flies away

Explanation:
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty
குறள் : 339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.


விளக்கம்:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
Kural: 339Translation:
Death is like a slumber deep And birth like waking from that sleep

Explanation:
Death is like sleep; birth is like awaking from it
குறள் : 340புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


விளக்கம்:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
Kural: 340Translation:
The life berthed in this body shows A fixed home it never knows

Explanation:
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...