திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [117] படர்மெலிந் திரங்கல் (Complainings)
குறள் : 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.


விளக்கம்:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
Kural: 1161Translation:
It swells out like baled out spring How to bear this pain so writhing?

Explanation:
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it
குறள் : 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.


விளக்கம்:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
Kural: 1162Translation:
I can't conceal this nor complain For shame to him who caused this pain

Explanation:
I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it
குறள் : 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.


விளக்கம்:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
Kural: 1163Translation:
In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame

Explanation:
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them
குறள் : 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.


விளக்கம்:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.
Kural: 1164Translation:
My lust is a sea; I do not see A raft to go across safely

Explanation:
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with
குறள் : 1165துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.


விளக்கம்:
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
Kural: 1165Translation:
What wilt they prove when they are foes Who in friendship bring me woes!

Explanation:
What will they prove when angry tempests lower?
குறள் : 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


விளக்கம்:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
Kural: 1166Translation:
The pleasure in love is oceanful But its pangs are more painful

Explanation:
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater
குறள் : 1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.


விளக்கம்:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
Kural: 1167Translation:
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush

Explanation:
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live
குறள் : 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.


விளக்கம்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
Kural: 1168Translation:
Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship

Explanation:
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion
குறள் : 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.


விளக்கம்:
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
Kural: 1169Translation:
Crueller than that cruel he Are midnight hours gliding slowly

Explanation:
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me
குறள் : 1170உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.


விளக்கம்:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
Kural: 1170Translation:
Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!

Explanation:
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...