திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [92] வரைவின் மகளிர் (Wanton Women)
குறள் : 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.


விளக்கம்:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
Kural: 911Translation:
For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles

Explanation:
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow
குறள் : 912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.


விளக்கம்:
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.
Kural: 912Translation:
Avoid ill-natured whores who feign Love only for their selfish gain

Explanation:
One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)
குறள் : 913பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.


விளக்கம்:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
Kural: 913Translation:
The false embrace of whores is like That of a damned corpse in the dark

Explanation:
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room
குறள் : 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.


விளக்கம்:
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
Kural: 914Translation:
The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace

Explanation:
The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches
குறள் : 915பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.


விளக்கம்:
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
Kural: 915Translation:
The lofty wise will never covet The open charms of a vile harlot

Explanation:
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights
குறள் : 916தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.


விளக்கம்:
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
Kural: 916Translation:
Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm

Explanation:
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)
குறள் : 917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.


விளக்கம்:
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
Kural: 917Translation:
Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere

Explanation:
Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things
குறள் : 918ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.


விளக்கம்:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
Kural: 918Translation:
Senseless fools are lured away By arms of sirens who lead astray

Explanation:
The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female
குறள் : 919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.


விளக்கம்:
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
Kural: 919Translation:
The soft jewelled arms of whores are hell Into which the degraded fall

Explanation:
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base
குறள் : 920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.


விளக்கம்:
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
Kural: 920Translation:
Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies

Explanation:
Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...