திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [127] அவர்வயின் விதும்பல் (Mutual Desire)
குறள் : 1261வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.


விளக்கம்:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
Kural: 1261Translation:
My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left

Explanation:
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail
குறள் : 1262இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.


விளக்கம்:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
Kural: 1262Translation:
Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid?

Explanation:
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose
குறள் : 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.


விளக்கம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
Kural: 1263Translation:
Will as guide he went to win Yet I live-to see him again

Explanation:
I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide
குறள் : 1264கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.


விளக்கம்:
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
Kural: 1264Translation:
My heart in rapture heaves to see His retun with love to embrace me

Explanation:
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love
குறள் : 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.


விளக்கம்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
Kural: 1265Translation:
Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files

Explanation:
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders
குறள் : 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.


விளக்கம்:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
Kural: 1266Translation:
Let my spouse return just a day Joy-drink shall drive my pain away

Explanation:
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow
குறள் : 1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.


விளக்கம்:
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
Kural: 1267Translation:
If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?

Explanation:
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
குறள் : 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.


விளக்கம்:
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
Kural: 1268Translation:
May the king fight and win and give And with my wife I will feast this eve!

Explanation:
Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening
குறள் : 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.


விளக்கம்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
Kural: 1269Translation:
One day seems as seven to those Who yearn return of distant spouse

Explanation:
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days
குறள் : 1270பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.


விளக்கம்:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?
Kural: 1270Translation:
When her heart is broken, what is The good of meeting and love-embrace?

Explanation:
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...