திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [91] பெண்வழிச் சேறல் (Being led by Women)
குறள் : 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.


விளக்கம்:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.
Kural: 901Translation:
Who dote on wives lose mighty gain That lust, dynamic men disdain

Explanation:
Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth
குறள் : 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.


விளக்கம்:
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
Kural: 902Translation:
Who dotes, unmanly, on his dame His wealth to him and all is shame

Explanation:
The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;
குறள் : 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.


விளக்கம்:
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.
Kural: 903Translation:
Who's servile to his wife always Shy he feels before the wise

Explanation:
The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good
குறள் : 904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.


விளக்கம்:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
Kural: 904Translation:
Fearing his wife salvationless The weaklings' action has no grace

Explanation:
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded
குறள் : 905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.


விளக்கம்:
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
Kural: 905Translation:
Who fears his wife fears always Good to do to the good and wise

Explanation:
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good
குறள் : 906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.


விளக்கம்:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
Kural: 906Translation:
Who fear douce arms of their wives Look petty even with god-like lives

Explanation:
They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods
குறள் : 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.


விளக்கம்:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
Kural: 907Translation:
Esteemed more is women bashful Than man servile unto her will

Explanation:
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs
குறள் : 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.


விளக்கம்:
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
Kural: 908Translation:
By fair-browed wives who are governed Help no friends nor goodness tend

Explanation:
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds
குறள் : 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.


விளக்கம்:
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
Kural: 909Translation:
No virtue riches nor joy is seen In those who submit to women

Explanation:
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure
குறள் : 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.


விளக்கம்:
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
Kural: 910Translation:
Thinkers strong and broad of heart By folly on fair sex do not dote

Explanation:
The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...