திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [61] மடி இன்மை (Unsluggishness)
குறள் : 601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.


விளக்கம்:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
Kural: 601Translation:
Quenchless lamp of ancestry goes When foul idleness encloses

Explanation:
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished
குறள் : 602மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.


விளக்கம்:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
Kural: 602Translation:
To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room

Explanation:
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct
குறள் : 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.


விளக்கம்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
Kural: 603Translation:
The fool who fosters sluggishness Before he dies ruins his house

Explanation:
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead
குறள் : 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.


விளக்கம்:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
Kural: 604Translation:
Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth

Explanation:
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions
குறள் : 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.


விளக்கம்:
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
Kural: 605Translation:
To lag, forget, idle and doze These four are pleasure boats of loss

Explanation:
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction
குறள் : 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.


விளக்கம்:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
Kural: 606Translation:
With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

Explanation:
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it
குறள் : 607இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.


விளக்கம்:
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
Kural: 607Translation:
The slothful lacking noble deeds Subject themselves to scornful words

Explanation:
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject
குறள் : 608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.


விளக்கம்:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
Kural: 608Translation:
If sloth invades a noble house It will become a slave of foes

Explanation:
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies
குறள் : 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.


விளக்கம்:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
Kural: 609Translation:
The blots on race and rule shall cease When one from sloth gets his release

Explanation:
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear
குறள் : 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.


விளக்கம்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
Kural: 610Translation:
The slothless king shall gain en masse *All regions trod by Lord apace * Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds

Explanation:
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...