திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [3] துறவறவியல் (Ascetic Virtue)
அதிகாரம்: [30] வாய்மை (Veracity)
குறள் : 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.


விளக்கம்:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
Kural: 291Translation:
If \"What is truth\"? the question be, It is to speak out evil-free

Explanation:
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)
குறள் : 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.


விளக்கம்:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
Kural: 292Translation:
E'en falsehood may for truth suffice, When good it brings removing vice

Explanation:
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault
குறள் : 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
Kural: 293Translation:
Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh

Explanation:
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)
குறள் : 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.


விளக்கம்:
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
Kural: 294Translation:
He lives in loving hearts of all Who serves the Truth serene in soul

Explanation:
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men
குறள் : 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.


விளக்கம்:
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
Kural: 295Translation:
To speak the truth from heart sincere Is more than giving and living austere

Explanation:
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities
குறள் : 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.


விளக்கம்:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
Kural: 296Translation:
Not to lie brings all the praise All virtues from Truth arise

Explanation:
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue
குறள் : 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.


விளக்கம்:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
Kural: 297Translation:
Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed

Explanation:
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue
குறள் : 298புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.


விளக்கம்:
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
Kural: 298Translation:
Water makes you pure outward Truth renders you pure inward

Explanation:
Purity of body is produced by water and purity of mind by truthfulness
குறள் : 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.


விளக்கம்:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
Kural: 299Translation:
All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light

Explanation:
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise
குறள் : 300யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.


விளக்கம்:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
Kural: 300Translation:
Of all the things we here have seen Nothing surpasses Truth serene!

Explanation:
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...