திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [10] இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
குறள் : 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


விளக்கம்:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
Kural: 91Translation:
The words of Seers are lovely sweet Merciful and free from deceit

Explanation:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous
குறள் : 92அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.


விளக்கம்:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
Kural: 92Translation:
Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence

Explanation:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind
குறள் : 93முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.


விளக்கம்:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Kural: 93Translation:
Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part

Explanation:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue
குறள் : 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.


விளக்கம்:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
Kural: 94Translation:
Whose loving words delight each one The woe of want from them is gone

Explanation:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech
குறள் : 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.


விளக்கம்:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
Kural: 95Translation:
To be humble and sweet words speak No other jewel do wise men seek

Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)
குறள் : 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்


விளக்கம்:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
Kural: 96Translation:
His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow

Explanation:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase
குறள் : 97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.


விளக்கம்:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
Kural: 97Translation:
The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds

Explanation:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)
குறள் : 98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.


விளக்கம்:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
Kural: 98Translation:
Kind words free from meanness delight This life on earth and life the next

Explanation:
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next
குறள் : 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?


விளக்கம்:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
Kural: 99Translation:
Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?

Explanation:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?
குறள் : 100இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
Kural: 100Translation:
Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits

Explanation:
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...