திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [131] புலவி (Pouting)
குறள் : 1301புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.


விளக்கம்:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
Kural: 1301Translation:
Feign sulk; embrace him not so that We can see his distress a bit

Explanation:
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not
குறள் : 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.


விளக்கம்:
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
Kural: 1302Translation:
Sulking is the salt of love; but Too much of it spoils the taste Wife Addresses Husband

Explanation:
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much
குறள் : 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.


விளக்கம்:
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
Kural: 1303Translation:
To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved

Explanation:
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony
குறள் : 1304ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.


விளக்கம்:
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
Kural: 1304Translation:
To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

Explanation:
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root
குறள் : 1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.


விளக்கம்:
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
Kural: 1305Translation:
Pouting of flower-eyed has To pure good mates a lovely grace

Explanation:
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands
குறள் : 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.


விளக்கம்:
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
Kural: 1306Translation:
Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits

Explanation:
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit
குறள் : 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.


விளக்கம்:
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
Kural: 1307Translation:
\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

Explanation:
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike
குறள் : 1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.


விளக்கம்:
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
Kural: 1308Translation:
What's the good of grieving lament When concious lover is not present?

Explanation:
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
குறள் : 1309நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.


விளக்கம்:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
Kural: 1309Translation:
Water delights in a shady grove And sulking in souls of psychic love

Explanation:
Like water in the shade, dislike is delicious only in those who love
குறள் : 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.


விளக்கம்:
ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
Kural: 1310Translation:
My heart athirst would still unite With her who me in sulking left!

Explanation:
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...