திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [52] தெரிந்து வினையாடல் (Selection and Employment)
குறள் : 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.


விளக்கம்:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
Kural: 511Translation:
Employ the wise who will discern The good and bad and do good turn

Explanation:
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking
குறள் : 512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.


விளக்கம்:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
Kural: 512Translation:
Let him act who resource swells; Fosters wealth and prevents ills

Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)
குறள் : 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.


விளக்கம்:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
Kural: 513Translation:
Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity

Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness
குறள் : 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.


விளக்கம்:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
Kural: 514Translation:
Though tried and found fit, yet we see Many differ before duty

Explanation:
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
குறள் : 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.


விளக்கம்:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
Kural: 515Translation:
Wise able men with power invest Not by fondness but by hard test

Explanation:
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment
குறள் : 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.


விளக்கம்:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
Kural: 516Translation:
Discern the agent and the deed And just in proper time proceed

Explanation:
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it
குறள் : 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.


விளக்கம்:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
Kural: 517Translation:
This work, by this, this man can do Like this entrust the duty due

Explanation:
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty
குறள் : 518வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.


விளக்கம்:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
Kural: 518Translation:
His fitness for the duty scan Leave him to do the best he can

Explanation:
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work
குறள் : 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.


விளக்கம்:
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Kural: 519Translation:
Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick

Explanation:
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties
குறள் : 520நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.


விளக்கம்:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
Kural: 520Translation:
Worker straight the world is straight The king must look to this aright

Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...