திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [12] களவியல் (The Pre-marital love)
அதிகாரம்: [109] தகை அணங்குறுத்தல் (The Pre-marital love)
குறள் : 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.


விளக்கம்:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
Kural: 1081Translation:
Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!

Explanation:
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed
குறள் : 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.


விளக்கம்:
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
Kural: 1082Translation:
The counter glances of this belle Are armied dart of the Love-Angel

Explanation:
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me
குறள் : 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


விளக்கம்:
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது
Kural: 1083Translation:
Not known before -I spy Demise In woman's guise with battling eyes

Explanation:
I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities
குறள் : 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.


விளக்கம்:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
Kural: 1084Translation:
This artless dame has darting eyes That drink the life of men who gaze

Explanation:
These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity
குறள் : 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.


விளக்கம்:
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
Kural: 1085Translation:
Is it death, eye or doe? All three In winsome woman's look I see

Explanation:
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
குறள் : 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.


விளக்கம்:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
Kural: 1086Translation:
If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain

Explanation:
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows
குறள் : 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


விளக்கம்:
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
Kural: 1087Translation:
Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover

Explanation:
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant
குறள் : 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.


விளக்கம்:
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
Kural: 1088Translation:
Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet

Explanation:
On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless
குறள் : 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.


விளக்கம்:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
Kural: 1089Translation:
Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?

Explanation:
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
குறள் : 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.


விளக்கம்:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
Kural: 1090Translation:
To the drunk alone is wine delight Nothing delights like love at sight

Explanation:
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...