திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [3] துறவறவியல் (Ascetic Virtue)
அதிகாரம்: [29] கள்ளாமை (The Absence of Fraud)
குறள் : 281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.


விளக்கம்:
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
Kural: 281Translation:
Let him who would reproachless be From all frauds guard his conscience free

Explanation:
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing
குறள் : 282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.


விளக்கம்:
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
Kural: 282Translation:
\"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth

Explanation:
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another
குறள் : 283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.


விளக்கம்:
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
Kural: 283Translation:
The gain by fraud may overflow But swift to ruin it shall go

Explanation:
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase
குறள் : 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.


விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
Kural: 284Translation:
The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain

Explanation:
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow
குறள் : 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.


விளக்கம்:
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
Kural: 285Translation:
Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth

Explanation:
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property
குறள் : 286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.


விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
Kural: 286Translation:
They cannot walk in measured bounds who crave and have covetous ends

Explanation:
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others
குறள் : 287களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.


விளக்கம்:
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
Kural: 287Translation:
Men of measured wisdom shun Black art of fraud and what it won

Explanation:
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude
குறள் : 288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.


விளக்கம்:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
Kural: 288Translation:
Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts

Explanation:
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude
குறள் : 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.


விளக்கம்:
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
Kural: 289Translation:
They perish in their perfidy Who know nothing but pilfery

Explanation:
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression
குறள் : 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.


விளக்கம்:
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
Kural: 290Translation:
Even the body rejects thieves; The honest men, heaven receives

Explanation:
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...