திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [4] ஊழியல் (Fate)
அதிகாரம்: [38] ஊழ் (Fate)
குறள் : 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.


விளக்கம்:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
Kural: 371Translation:
Efforts succeed by waxing star Wealth-losing brings waning star

Explanation:
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate
குறள் : 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.


விளக்கம்:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
Kural: 372Translation:
Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!

Explanation:
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge
குறள் : 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.


விளக்கம்:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
Kural: 373Translation:
What matters subtle study deep? Levels of innate wisdom-keep

Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail
குறள் : 374இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.


விளக்கம்:
உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
Kural: 374Translation:
Two natures in the world obtain Some wealth and others wisdom gain

Explanation:
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge
குறள் : 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.


விளக்கம்:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
Kural: 375Translation:
In making wealth fate changes mood; The good as bad and bad as good

Explanation:
In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)
குறள் : 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.


விளக்கம்:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
Kural: 376Translation:
Things not thine never remain Things destined are surely thine

Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away
குறள் : 377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.


விளக்கம்:
ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
Kural: 377Translation:
Who crores amass enjoy but what The Dispenser's decrees allot

Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)
குறள் : 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.


விளக்கம்:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
Kural: 378Translation:
The destitute desire will quit If fate with ills visit them not

Explanation:
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away
குறள் : 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?


விளக்கம்:
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
Kural: 379Translation:
Who good in time of good perceive In evil time why should they grieve?

Explanation:
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
குறள் : 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.


விளக்கம்:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
Kural: 380Translation:
What power surpasses fate? Its will Persists against the human skill

Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...