திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [50] இடனறிதல் (Knowing the Place)
குறள் : 491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.


விளக்கம்:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
Kural: 491Translation:
No action take, no foe despise Until you have surveyed the place

Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him
குறள் : 492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.


விளக்கம்:
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
Kural: 492Translation:
Many are gains of fortresses Ev'n to kings of power and prowess

Explanation:
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages
குறள் : 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.


விளக்கம்:
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,
Kural: 493Translation:
Weaklings too withstand foe's offence In proper fields of strong defence

Explanation:
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies
குறள் : 494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.


விளக்கம்:
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
Kural: 494Translation:
If fighters fight in vantage field The plans of foes shall be baffled

Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them
குறள் : 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.


விளக்கம்:
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
Kural: 495Translation:
In water crocodile prevails In land before others it fails

Explanation:
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it
குறள் : 496கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.


விளக்கம்:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
Kural: 496Translation:
Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car

Explanation:
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth
குறள் : 497அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.


விளக்கம்:
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
Kural: 497Translation:
No aid but daring dash they need When field is chosen right for deed

Explanation:
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations
குறள் : 498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.


விளக்கம்:
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
Kural: 498Translation:
Though force is small, if place is right One quells a foe of well-armed might

Explanation:
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act
குறள் : 499சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.


விளக்கம்:
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
Kural: 499Translation:
To face a foe at home is vain Though fort and status are not fine

Explanation:
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress
குறள் : 500காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.


விளக்கம்:
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
Kural: 500Translation:
A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire

Explanation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...