திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [11] செய்ந்நன்றியறிதல் (Gratitude)
குறள் : 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.


விளக்கம்:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
Kural: 101Translation:
Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven

Explanation:
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received
குறள் : 102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


விளக்கம்:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
Kural: 102Translation:
A help rendered in hour of need Though small is greater than the world

Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world
குறள் : 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


விளக்கம்:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
Kural: 103Translation:
Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects

Explanation:
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea
குறள் : 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.


விளக்கம்:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
Kural: 104Translation:
Help given though millet-small Knowers count its good palm-tree tall

Explanation:
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit
குறள் : 105உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.


விளக்கம்:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
Kural: 105Translation:
A help is not the help's measure It is gainer's worth and pleasure

Explanation:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure
குறள் : 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.


விளக்கம்:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
Kural: 106Translation:
Forget not friendship of the pure Forsake not timely helpers sure

Explanation:
Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless
குறள் : 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.


விளக்கம்:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
Kural: 107Translation:
Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears

Explanation:
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction
குறள் : 108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


விளக்கம்:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
Kural: 108Translation:
To forget good turns is not good Good it is over wrong not to brood

Explanation:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)
குறள் : 109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


விளக்கம்:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
Kural: 109Translation:
Let deadly harms be forgotten While remembering one good-turn

Explanation:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred
குறள் : 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


விளக்கம்:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
Kural: 110Translation:
The virtue-killer may be saved Not benefit-killer who is damned

Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...