திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [48] வலியறிதல் (The Knowledge of Power)
குறள் : 471வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.


விளக்கம்:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
Kural: 471Translation:
Judge act and might and foeman's strength The allies' strength and go at length

Explanation:
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act
குறள் : 472ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.


விளக்கம்:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
Kural: 472Translation:
Nothing hampers the firm who know What they can and how to go

Explanation:
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and
குறள் : 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.


விளக்கம்:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
Kural: 473Translation:
Many know not their meagre might Their pride breaks up in boastful fight

Explanation:
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it
குறள் : 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


விளக்கம்:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
Kural: 474Translation:
Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure

Explanation:
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does
குறள் : 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.


விளக்கம்:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
Kural: 475Translation:
Even the gentle peacock's plume Cart's axle breaks by gross volume

Explanation:
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded
குறள் : 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.


விளக்கம்:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
Kural: 476Translation:
Beyond the branches' tip who skips Ends the life as his body rips

Explanation:
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further
குறள் : 477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.


விளக்கம்:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
Kural: 477Translation:
Know the limit; grant with measure This way give and guard your treasure

Explanation:
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property
குறள் : 478ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.


விளக்கம்:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
Kural: 478Translation:
The outflow must not be excess No matter how small income is

Explanation:
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income
குறள் : 479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.


விளக்கம்:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
Kural: 479Translation:
Who does not know to live in bounds His life seems rich but thins and ends

Explanation:
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue
குறள் : 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


விளக்கம்:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
Kural: 480Translation:
Wealth amassed quickly vanishes Sans level if one lavishes

Explanation:
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...