திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [5] அரசியல் (Royalty)
அதிகாரம்: [56] கொடுங்கோன்மை (The Cruel Sceptre)
குறள் : 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.


விளக்கம்:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
Kural: 551Translation:
The unjust tyrant oppressor Is worse than cruel murderer

Explanation:
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer
குறள் : 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.


விளக்கம்:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
Kural: 552Translation:
Sceptered tyrant exacting gold Is \"give\" of lanced robber bold

Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"
குறள் : 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.


விளக்கம்:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
Kural: 553Translation:
Spy wrongs daily and do justice Or day by day the realm decays

Explanation:
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin
குறள் : 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.


விளக்கம்:
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
Kural: 554Translation:
The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse

Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects
குறள் : 555அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை


விளக்கம்:
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
Kural: 555Translation:
Groaning tears caused by tyrant's sway File the royal wealth away

Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?
குறள் : 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.


விளக்கம்:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
Kural: 556Translation:
Glory endures by sceptre right Without it wanes the royal light

Explanation:
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance
குறள் : 557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.


விளக்கம்:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
Kural: 557Translation:
Dry like the earth without rainfall Is graceless king to creatures all

Explanation:
As is the world without rain, so live a people whose king is without kindness
குறள் : 558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.


விளக்கம்:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
Kural: 558Translation:
To have is worse than having not If ruler is unjust despot

Explanation:
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice
குறள் : 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.


விளக்கம்:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
Kural: 559Translation:
The sky withdraws season's shower If the king misuses his power

Explanation:
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers
குறள் : 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


விளக்கம்:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
Kural: 560Translation:
The *six-functioned forget their lore Cows give less if kings guard no more * the six functions are: learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice These are duties of Vedic savants

Explanation:
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...