திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [11] குடியியல் (Miscellaneous)
அதிகாரம்: [102] நாணுடைமை (Shame)
குறள் : 1011கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.


விளக்கம்:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
Kural: 1011Translation:
To shrink from evil deed is shame The rest is blush of fair-faced dame

Explanation:
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids
குறள் : 1012ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.


விளக்கம்:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
Kural: 1012Translation:
Food, dress and such are one for all Modesty marks the higher soul

Explanation:
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good
குறள் : 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.


விளக்கம்:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
Kural: 1013Translation:
All lives have their lodge in flesh Perfection has its home in blush

Explanation:
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection
குறள் : 1014அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.


விளக்கம்:
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
Kural: 1014Translation:
Shame is the jewel of dignity Shameless swagger is vanity

Explanation:
Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)
குறள் : 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.


விளக்கம்:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
Kural: 1015Translation:
In them resides the sense of shame Who blush for their and other's blame

Explanation:
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt
குறள் : 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.


விளக்கம்:
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
Kural: 1016Translation:
The great refuse the wonder-world Without modesty's hedge and shield

Explanation:
The great make modesty their barrier (of defence) and not the wide world
குறள் : 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.


விளக்கம்:
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
Kural: 1017Translation:
For shame their life the shame-sensed give Loss of shame they won't outlive

Explanation:
The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life
குறள் : 1018பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.


விளக்கம்:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
Kural: 1018Translation:
Virtue is much ashamed of him Who shameless does what others shame

Explanation:
Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of
குறள் : 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.


விளக்கம்:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
Kural: 1019Translation:
Lapse in manners injures the race Want of shame harms every good grace

Explanation:
Want of manners injures one's family; but want of modesty injures one's character
குறள் : 1020நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.


விளக்கம்:
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
Kural: 1020Translation:
Movements of the shameless in heart Are string-led puppet show in fact

Explanation:
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...