திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [10] நட்பியல் (Friendship)
அதிகாரம்: [94] சூது (Gambling)
குறள் : 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.


விளக்கம்:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
Kural: 931Translation:
Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain?

Explanation:
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook
குறள் : 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.


விளக்கம்:
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
Kural: 932Translation:
Can gamblers in life good obtain Who lose a hundred one to gain?

Explanation:
That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred?
குறள் : 933உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.


விளக்கம்:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
Kural: 933Translation:
If kings indulge in casting dice All their fortune will flow to foes

Explanation:
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands
குறள் : 934சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.


விளக்கம்:
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
Kural: 934Translation:
Nothing will make you poor like game Which adds to woes and ruins fame

Explanation:
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation
குறள் : 935கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.


விளக்கம்:
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
Kural: 935Translation:
The game, game-hall and gambler's art Who sought with glee have come to nought

Explanation:
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice)
குறள் : 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.


விளக்கம்:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
Kural: 936Translation:
Men swallowed by the ogress, dice Suffer grief and want by that vice

Explanation:
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world
குறள் : 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.


விளக்கம்:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
Kural: 937Translation:
If men their time in game-den spend Ancestral wealth and virtues end

Explanation:
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character
குறள் : 938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.


விளக்கம்:
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
Kural: 938Translation:
Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes

Explanation:
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)
குறள் : 939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.


விளக்கம்:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
Kural: 939Translation:
Dress, wealth, food, fame, learning-these five In gambler's hand will never thrive

Explanation:
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning
குறள் : 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.


விளக்கம்:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
Kural: 940Translation:
Love for game grows with every loss As love for life with sorrows grows

Explanation:
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...