திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [17] அழுக்காறாமை (Not Envying)
குறள் : 161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.


விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
Kural: 161Translation:
Deem your heart as virtuous When your nature is not jealous

Explanation:
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
குறள் : 162விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.


விளக்கம்:
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
Kural: 162Translation:
No excellence excels the one That by nature envies none

Explanation:
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others
குறள் : 163அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.


விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
Kural: 163Translation:
Who envies others' good fortune Can't prosper in virtue of his own

Explanation:
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
குறள் : 164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.


விளக்கம்:
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
Kural: 164Translation:
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng

Explanation:
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds
குறள் : 165அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.


விளக்கம்:
பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
Kural: 165Translation:
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him

Explanation:
To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
குறள் : 166கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


விளக்கம்:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
Kural: 166Translation:
Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin

Explanation:
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment
குறள் : 167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.


விளக்கம்:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
Kural: 167Translation:
Fortune deserts the envious Leaving misfortune omnious

Explanation:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister
குறள் : 168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


விளக்கம்:
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
Kural: 168Translation:
Caitiff envy despoils wealth And drags one into evil path

Explanation:
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
குறள் : 169அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


விளக்கம்:
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
Kural: 169Translation:
Why is envy rich, goodmen poor People with surprise think over

Explanation:
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered
குறள் : 170அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


விளக்கம்:
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
Kural: 170Translation:
The envious prosper never The envyless prosper ever

Explanation:
Never have the envious become great; never have those who are free from envy been without greatness

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...