திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [2] பொருட்பால் (Wealth)
குறள் இயல்: [7] அரணியல் (The Essentials of a State)
அதிகாரம்: [75] அரண் (The Fortification)
குறள் : 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.


விளக்கம்:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
Kural: 741Translation:
The fort is vital for offence Who fear the foes has its defence

Explanation:
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter
குறள் : 742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.


விளக்கம்:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
Kural: 742Translation:
A crystal fount, a space a mount Thick woods form a fort paramount

Explanation:
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests
குறள் : 743உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.


விளக்கம்:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
Kural: 743Translation:
An ideal fort's so says science: High, broad, strong and hard for access

Explanation:
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility
குறள் : 744சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.


விளக்கம்:
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
Kural: 744Translation:
Ample in space, easy to hold The fort foils enemies bold

Explanation:
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes
குறள் : 745கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.


விளக்கம்:
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
Kural: 745Translation:
Impregnable with stores of food Cosy to live-That fort is good

Explanation:
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates
குறள் : 746எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.


விளக்கம்:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
Kural: 746Translation:
A fort is full of stores and arms And brave heroes to meet alarms

Explanation:
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)
குறள் : 747முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.


விளக்கம்:
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
Kural: 747Translation:
Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands

Explanation:
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it
குறள் : 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.


விளக்கம்:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.
Kural: 748Translation:
A fort holds itself and defies The attacks of encircling foes

Explanation:
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it
குறள் : 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.


விளக்கம்:
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
Kural: 749Translation:
A fort it is that fells the foes And gains by deeds a name glorious

Explanation:
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield
குறள் : 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.


விளக்கம்:
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை
Kural: 750Translation:
But a fort however grand Is nil if heroes do not stand

Explanation:
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

Credit: Thirukural
Write Your Comments or Suggestion...