திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [3] காமத்துப்பால் (Love)
குறள் இயல்: [13] கற்பியல் (The Post-marital love)
அதிகாரம்: [121] நினைந்தவர் புலம்பல் (Sad Memories)
குறள் : 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.


விளக்கம்:
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
Kural: 1201Translation:
Love is sweeter than wine; for vast Is its delight at very thought

Explanation:
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight
குறள் : 1202எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.


விளக்கம்:
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
Kural: 1202Translation:
Pains are off at the lover's thought In all aspects this love is sweet

Explanation:
Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful
குறள் : 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.


விளக்கம்:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
Kural: 1203Translation:
To sneeze I tried hence but could not Me he tried to think but did not

Explanation:
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not
குறள் : 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.


விளக்கம்:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?
Kural: 1204Translation:
Have I a place within his heart? Ah from mine he will never depart

Explanation:
He continues to abide in my soul, do I likewise abide in his ?
குறள் : 1205தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.


விளக்கம்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
Kural: 1205Translation:
Shame! My heart often he enters Banning me entry into his

Explanation:
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine
குறள் : 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.


விளக்கம்:
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
Kural: 1206Translation:
Beyond the thought of life with him What else of life can I presume?

Explanation:
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
குறள் : 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.


விளக்கம்:
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
Kural: 1207Translation:
What will happen if I forget When his memory burns my heart?

Explanation:
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
குறள் : 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.


விளக்கம்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
Kural: 1208Translation:
I bring him to ceaseless memory He chides not; and thus honours me

Explanation:
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved
குறள் : 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.


விளக்கம்:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
Kural: 1209Translation:
Dear life ebbs away by thought Of him who said we are one heart

Explanation:
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different
குறள் : 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.


விளக்கம்:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
Kural: 1210Translation:
Hail moon! Set not so that I find Him who left me but not my mind

Explanation:
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...