திருக்குறள் , Tamil Tirukural

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


குறள் பால்: [1] அறத்துப்பால் (Virtue)
குறள் இயல்: [2] இல்லறவியல் (Domestic Virtue)
அதிகாரம்: [21] தீவினையச்சம் (Dread of Evil Deeds)
குறள் : 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.


விளக்கம்:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
Kural: 201Translation:
Sinners fear not the pride of sin The worthy dread the ill within

Explanation:
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin
குறள் : 202தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.


விளக்கம்:
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
Kural: 202Translation:
Since evil begets evil dire Fear ye evil more than fire

Explanation:
Because evil produces evil, therefore should evil be feared more than fire
குறள் : 203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


விளக்கம்:
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
Kural: 203Translation:
The wisest of the wise are those Who injure not even their foes

Explanation:
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
குறள் : 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.


விளக்கம்:
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
Kural: 204Translation:
His ruin virtue plots who plans The ruin of another man's

Explanation:
Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates
குறள் : 205இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.


விளக்கம்:
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
Kural: 205Translation:
Who makes poverty plea for ill Shall reduce himself poorer still

Explanation:
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still
குறள் : 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.


விளக்கம்:
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
Kural: 206Translation:
From wounding others let him refrain Who would from harm himself remain

Explanation:
Let him not do evil to others who desires not that sorrows should pursue him
குறள் : 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.


விளக்கம்:
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
Kural: 207Translation:
Men may escape other foes and live But sin its deadly blow will give

Explanation:
However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill
குறள் : 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.


விளக்கம்:
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
Kural: 208Translation:
Ruin follows who evil do As shadow follows as they go

Explanation:
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not
குறள் : 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.


விளக்கம்:
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
Kural: 209Translation:
Let none who loves himself at all Think of evil however small

Explanation:
If a man love himself, let him not commit any sin however small
குறள் : 210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.


விளக்கம்:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
Kural: 210Translation:
He is secure, know ye, from ills Who slips not right path to do evils

Explanation:
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path

Credit: Thirukural




Write Your Comments or Suggestion...