திருக்குறள் , Tamil Tirukural
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
குறள் பால்: [3] | காமத்துப்பால் (Love) |
குறள் இயல்: [13] | கற்பியல் (The Post-marital love) |
அதிகாரம்: [133] | ஊடலுவகை (The Pleasures of Temporary Variance) |
குறள் : 1321 | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு. விளக்கம்: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. |
Kural: 1321 | Translation: He is flawless; but I do pout So that his loving ways show out Explanation: Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike |
குறள் : 1322 | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். விளக்கம்: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். |
Kural: 1322 | Translation: Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives Explanation: His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike |
குறள் : 1323 | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. விளக்கம்: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. |
Kural: 1323 | Translation: Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth? Explanation: Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water? |
குறள் : 1324 | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. விளக்கம்: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. |
Kural: 1324 | Translation: In long pout after embrace sweet A weapon is up to break my heart Explanation: In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart |
குறள் : 1325 | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. விளக்கம்: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. |
Kural: 1325 | Translation: Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms Explanation: Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love |
குறள் : 1326 | உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. விளக்கம்: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. |
Kural: 1326 | Translation: Sweeter than meal is digestion And sulk in love than union Explanation: To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse |
குறள் : 1327 | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். விளக்கம்: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். |
Kural: 1327 | Translation: The yielder wins in lover's pout Reunited joy brings it out Explanation: Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which |
குறள் : 1328 | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. விளக்கம்: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. |
Kural: 1328 | Translation: Shall not our pouting again give The dew-browed joy of joint love? Explanation: Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire? |
குறள் : 1329 | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. விளக்கம்: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. |
Kural: 1329 | Translation: Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells! Explanation: May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her! |
குறள் : 1330 | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். விளக்கம்: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். |
Kural: 1330 | Translation: Bouderie is lovers' delight Its delight grows when they unite Explanation: Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike |
Credit: Thirukural