Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
மு
| முகத்துக்கு முகம் கண்ணாடி |
| முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? |
| முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். |
| முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா? |
| முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா |
| முதல் கோணல் முற்றுங் கோணல் |
| முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். |
| முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை. |
| முருங்கை பருத்தால் தூணாகுமா? |
| முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும். |
| முள்ளை முள்ளால் எடு. |
| முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். |
| முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது? |
| முன் ஏர் போன வழிப் பின் ஏர். |
| முன்கை நீண்டால் முழங்கை நீளும். |
| முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? |
| முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


