Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
உ
| உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. |
| உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். |
| உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா. |
| உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை. |
| உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா? |
| உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு. |
| உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும். |
| உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே. |
| உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். |
| உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது. |
| உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். |
| உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும். |
| உதட்டில் உறவு உள்ளத்தில் பகை. |
| உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். |
| உப்பிட்டவரை உள்ளளவும் நினை. |
| உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? |
| உயிர் காப்பான் தோழன். |
| உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? |
| உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. |
| உலோபிக்கு இரட்டை செலவு. |
| உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. |
| உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது. |
| உளவு இல்லாமல் களவு இல்லை. |
| உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல |
| உள்ளது போகாது இல்லது வாராது. |
| உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. |
| உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்? |
| உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


