Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
மா
மாடம் இடிந்தால் கூடம். |
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? |
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா? |
மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது. |
மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும். |
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். |
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். |
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். |
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. |
மாரடித்த கூலி மடி மேலே. |
மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. |
மாரி யல்லது காரியம் இல்லை. |
மாவுக்குத் தக்க பணியாரம். |
மாற்றானுக்கு இடங் கொடேல். |
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? |
மானைக் காட்டி மானைப் பிடிப்பார். |
Credit: tamilproverbs