Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
எ
| எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. |
| எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? |
| எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. |
| எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே. |
| எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன? |
| எண் இல்லாதவர் கண் இல்லாதவர், |
| எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். |
| எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். |
| எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. |
| எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை. |
| எண்ணை முந்துதோ திரி முந்துதோ? |
| எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். |
| எதார்த்தவாதி வெகுசன விரோதி. |
| எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். |
| எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும். |
| எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? |
| எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். |
| எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா. |
| எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? |
| எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். |
| எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும். |
| எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். |
| எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? |
| எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. |
| எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? |
| எலி அழுதால் பூனை விடுமா? |
| எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். |
| எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் |
| எலி வளையானாலும் தனி வலை வேண்டும். |
| எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? |
| எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்? |
| எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? |
| எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான். |
| எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். |
| எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி. |
| எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். |
| எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி. |
| எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும். |
| எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான். |
| எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு. |
| எறும்பு ஊர கல்லுந் தேயும். |
| எறும்புந் தன் கையால் எண் சாண். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


