Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
ஆ
| ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை. |
| ஆடையில்லாதவன் அரை மனிதன். |
| ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. |
| ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். |
| ஆரால் கேடு, வாயால் கேடு. |
| ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. |
| ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. |
| ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை. |
| ஆழமறியாமல் காலை இடாதே. |
| ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். |
| ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். |
| ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. |
| ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. |
| ஆறின கஞ்சி பழங் கஞ்சி. |
| ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? |
| ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. |
| ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் |
| ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. |
| ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. |
| ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். |
| ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். |
| ஆனைக்கும் அடிசறுக்கும். |
| ஆனை படுத்தால் ஆள் மட்டம். |
| ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


