Tamil proverbs - தமிழ் பழமொழிகள்

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...


நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
நன்மை கடைப்பிடி.

Credit: tamilproverbs




Write Your Comments or Suggestion...