Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
கு
| குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? |
| குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. |
| குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். |
| குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். |
| குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? |
| குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும். |
| குணத்தை மாற்றக் குருவில்லை. |
| குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை. |
| குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று. |
| குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள். |
| குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. |
| குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை. |
| குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும். |
| குப்பை உயரும் கோபுரம் தாழும். |
| குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன? |
| குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். |
| குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? |
| குரைக்கிற நாய் கடிக்காது. |
| குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே |
| குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி. |
| குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது. |
| குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது. |
| குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். |
| குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. |
| குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. |
| குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா? |
| கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு. |
| குரங்கின் கைப் பூமாலை. |
| குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது. |
| குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை. |
| குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


