Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
த
| தங்கம் தரையிலே தவிடு பானையிலே. |
| தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. |
| தடி எடுத்தவன் தண்டல்காரனா ? |
| தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். |
| தணிந்த வில்லுத்தான் தைக்கும். |
| தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும். |
| தண்ணீரையும் தாயையும் பழிக்காதே. |
| தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். |
| தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி. |
| தந்தை தாய் பேண். |
| தம்பி உடையான் படைக்கு அஞ்சான். |
| தருமம் தலைகாக்கும். |
| தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். |
| தலை இருக்க வால் ஆடலாமா ? |
| தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ? |
| தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா? |
| தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். |
| தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர். |
| தவளை தன் வாயாற் கெடும். |
| தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும். |
| தனக்கு மிஞ்சித் தான் தருமம் |
| தனி மரம் தோப்பாகாது. |
| தன் கையே தனக்குதவி. |
| தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும். |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


