Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
ப
| பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே. |
| பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே. |
| பகைவர் உறவு புகை எழு நெருப்பு. |
| பக்கச் சொல் பதினாயிரம். |
| பசியுள்ளவன் ருசி அறியான். |
| பசி வந்திடில் பத்தும் பறந்துபோம். |
| பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? |
| பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? |
| படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். |
| படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். |
| படையிருந்தால் அரணில்லை. |
| படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். |
| பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். |
| பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். |
| பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். |
| பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். |
| பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். |
| பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? |
| பணம் பத்தும் செய்யும். |
| பணம் உண்டானால் மணம் உண்டு. |
| பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே. |
| பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும். |
| பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். |
| பதறாத காரியம் சிதறாது. |
| பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. |
| பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. |
| பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. |
| பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். |
| பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். |
| பருவத்தே பயிர் செய். |
| பல துளி பெருவெள்ளம். |
| பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். |
| பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். |
| பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை. |
| பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும். |
| பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. |
| பழகப் பழகப் பாலும் புளிக்கும். |
| பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம். |
| பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம். |
| பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? |
| பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. |
| பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? |
| பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை. |
| பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ? |
| பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர். |
| பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும். |
| பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி. |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


