Tamil proverbs - தமிழ் பழமொழிகள்

Please leave a remark at the bottom of each page with your useful suggestion.


Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...

கோ


கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

Credit: tamilproverbs





Support our work — donate ₹100.


Write Your Comments or Suggestion...