Tamil proverbs - தமிழ் பழமொழிகள்
Please leave a remark at the bottom of each page with your useful suggestion.
Tamil proverbs (தமிழ் பழமொழிகள்)...
அ
| அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
| அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. |
| அகல உழுகிறதை விட ஆழ உழு. |
| அகல் வட்டம் பகல் மழை. |
| அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. |
| அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். |
| அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. |
| அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
| அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
| அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். |
| அடாது செய்தவன் படாது படுவான். |
| அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். |
| அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். |
| அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். |
| அடியாத மாடு படியாது. |
| அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். |
| அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். |
| அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. |
| அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. |
| அந்தி மழை அழுதாலும் விடாது. |
| அப்பன் அருமை மாண்டால் தெரியும். |
| அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. |
| அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். |
| அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். |
| அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். |
| அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. |
| அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? |
| அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. |
| அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் |
| அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். |
| அளக்கிற நாழி அகவிலை அறியுமா? |
| அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. |
| அறச் செட்டு முழு நட்டம். |
| அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். |
| அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை. |
| அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். |
| அறமுறுக்கினால் அற்றும் போகும். |
| அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். |
| அறிய அறியக் கெடுவார் உண்டா? |
| அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். |
| அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். |
| அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. |
| அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை. |
| அறிவுடையாரை அரசனும் விரும்புவான். |
| அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும். |
| அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. |
| அற்ப அறிவு அல்லற் கிடம். |
| அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். |
| அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? |
| அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். |
| அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். |
| அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? |
Credit: tamilproverbs
Write Your Comments or Suggestion...


